அப்பல்லோ மருத்துவமனையில், ‘புரோஹெல்த்' சுகாதார திட்டம்: பிரதாப் ரெட்டி துவக்கி வைத்தார்!

திருச்சி, செப். 20தொற்று அல்லாத நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகை யில்அப்பல்லோ மருத்துவ மனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புரோஹெல்த்' சுகாதார திட்டத்தை அந்த குழுமத் தின் தலைவர் பிரதாப் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல், மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவ மனையான அப்பல்லோ குழுமம், இந்தியாவின் முதல், மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவ மனையான அப்பல்லோ குழுமம், தொற்று அல்லாத நோய்களான பக்கவாதம், சர்க்கரை நோய், புற்று நோய், உடல் பருமன், தூக்கமின்மை ஆகிய தில் இருந்து கண்காணிக்க வும், அவற்றுக்கு சிறப்பு அளிக்கவும் அப்போலோ மருத்துவமனை 'புரோ ஹெல்த்' என்ற விரிவான சுகாதார மேலாண்மை திட் டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா, சென் னையில் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இதில் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசு கையில், ''புரோஹெல்த் திட்டம் மிகவும் சக்தி வாய்ந்த உடல் நல சுகாதார மேலாண்மை திட்டம். 20 பில்லியனுக்கு அதிகமான சுகாதார சோதனைகளை அடிப்படையாக கொண்டு இந்த திட்டத்தின் செயல் பாடுகளை அப்பல்லோ மருத்துவர்கள் வடிவமைத் துள்ளனர். தொற்றுநோய் அல்லாத நோய்கள், சுனாமி போல உலகத்தை அச்சுறுத்து கிறது. அதன்படி புற்று நோய், சர்க்கரை நோய், உடல் பருமன் நோய், பொதுமக்களை அதிகள வில் பாதிக்கிறது. இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி புதிய முறையில் சிகிச்சை அளித்து குணப்ப டுத்துவது தான் இந்த அப்பல்லோபுரோஹெல்த் திட்டத்தின் முக்கிய நோக்கம்,” என்றார். அப்பல்லோ நிறுவனத் தின் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி பேசுகையில், "தொற்று நோய் அல்லாத நோய்கள் மிக பெரிய சவா லாக உள்ளது. அப்பல்லோ புரோஹெல்த் திட்டம் இந்த நோய்களை குணப்படுத்தி மக்களின் வாழ்க்கையில் உறுதியான மாற்றங்களை நிகழ்த்தும்,'' என்றார். இந்த விழாவில், அப்பல்லோ மருத்துவ மனையின் மருத்துவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.