இளைஞருக்கு பாலியல் தொல்லை; செல்பியால் வந்த வினை

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கடந்த டிச.,08 ம் தேதி பிரபல ஹோட்டலுக்கு சென்றுள்ளார். பின்பு, ஹோட்டல் முன்பு நின்று செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்தார். இளைஞரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் 4 வாலிபர்கள், அந்த ஹோட்டல் பற்றிய விவரத்தை அறிந்து அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.


 


ஹோட்டலில் இளைஞரை கண்டறிந்த 4 பேரும், அவரிடம் சென்று, இன்ஸ்டாகிராமில் தங்களின் பெரிய ரசிகர்கள் என பேச்சுக் கொடுத்துள்ளனர். மேலும், தங்களுடன் பைக் ரைடு வருமாறு அழைத்துள்ளனர். இவர்களின் பேச்சில் மயங்கி 4 பேருடன் பைக்கில் சுற்றியுள்ளார். பின்னர், மும்பை விமானநிலையம் அருகே பைக்கை நிறுத்தி, காரில் செல்லலாம் என வற்புறுத்தியுள்ளனர்.


 

காரில் சுமார் 3 மணிநேரமாக 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்பு, அடுத்தநாள் காலை, சாலையின் ஓரமாக இளைஞரை இறக்கிவிட்டு 4 பேரும் தப்பினர். இது குறித்து வி.பி.நகர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் புகாரளித்தார். அடுத்த சில மணிநேரத்தில் 4 பேரையும் இயற்கைக்கு மாறான உறவு வைத்ததாக 377 பிரிவின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். அதில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.