அண்ணா சாலையில் தள்ளுமுள்ளு.. ரோட்டில் உருண்டு புரண்டு.. திரும்பி பார்க்க வைத்த சிறுத்தைகள்

சென்னை:


அண்ணாசாலையையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் திருமாவளவன்.. தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் கிட்டத்தட்ட 1500 பேர் திருமாவளவனுடன் சேர்த்து கைதானார்கள்.. மறியல்.. ரோட்டில் புரண்டு.. உருண்டது.. தள்ளுமுள்ளு.. கைது போன்ற நடவடிக்கையால் அண்ணாசாலையே பதட்டமாக காணப்பட்டது!


தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி அண்ணாசாலையில் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

தொமுச., சிஐடியு, ஏஐடியுசி., ஐஎன்டியுசி, மதிமுக, விசிக உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலையிலேயே தாராபூர் டவர் அருகில் ஒன்று கூடினர்.. உடனடியாக மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களையும் எழுப்ப தொடங்கினர்.